இராணுவத்தின் கண்முன்னே தோன்றிய திகில்; திணறத் திணறத் தாக்கிய பயங்கரவாதிகள்!

162shares

நைஜீரியாவில் இயங்கி வரும் போஹோ ஹராம் ஆயததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 இராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய கடும் போக்கு அமைப்பான போஹோ ஹராம் அமைப்பு கடந்த சில வருடங்களாக கடுமையான கொரில்லா தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

இஸ்லாமிய பழமைவாத கொள்கைகளில் மூழ்கிக் கிடக்கும் அமைப்பான குறித்த அமைப்பின் உறுப்பினர்கள், நைஜீரியாவில் வட பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் இருக்கும் இராணுவத்தினர் மீது அவ்வப்போது பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள இராணுவ தளத்தின் மீது போஹோ ஹராம் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சுமார் 15 இராணுவத்தினர் உயிரழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த தாக்குதலில் நைஜீரியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனமான நெமாவின் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒரு மாதத்துக்குள் குறித்த பகுதியில் அமைந்துள்ள இராணுவ இலக்கின் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)