தொடரும் சீரற்ற வானிலையால் மலையக மக்கள் பெரிதும் பாதிப்பு

5shares
Image

மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேவேளை, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை நாளை வரை தொடர்ந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மலையகத்தின் அக்கரபத்தன டயகம மன்றாசி ஹோல்புறூக் நாகசேனை லிந்துலை மெராயா ஆகிய பகுதிகள் சீரற்ற வானிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதியிலுள்ள மின் கம்பங்கள் சேதமாகியுள்ளதுடன் மின் கம்பிகளும் அறுந்துள்ளன.

இதனால் பிரதேச மக்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்

இந்த அனர்த்தத்தினால் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளன.

நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறாத நிலையில் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு வீடுகளிலும் உள்ள 11 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக கெனியன், லக்ஸபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை நாளை வரை தொடர்ந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Image0

Image1

Image2

Image3

Image4

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!