செய்தி விவரங்கள்

எப்.பி.ஐயின் முன்னாள் தலைவரை பற்றி மனம் திறந்து கதைக்க தயார் - ட்ரம்ப்

அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமேயுடன் மேற்கொண்ட உரையாடல்கள் தொடர்பில் தான் ஒளிவு மறைவு இல்லாமல் கதைப்பதற்கு தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் போது தான் 100 வீதம் மனம் துறந்து கதைக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கோமே விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் தெரிவித்த பல விடயங்களை ஜேம்ஸ் கோமே வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இதே போன்று தான் தெரிவிக்காத பல விடயங்களையும் அவர் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தனக்கு விசுவாசமாக நடந்துகொள்ள தவறியதாலேயே ஜேம்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே கோமே பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு