செய்தி விவரங்கள்

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சர்வதேச தீவிரவாதி- அறிவித்தது அமெரிக்கா.!

காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவனான சையது சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது அமெரிக்கா. இந்த அறிவிப்பினையடுத்து  அமெரிக்க குடிமக்கள் சையது சலாவுதீனுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அமெரிக்காவின் எல்லைக்கு உட்பட்ட சையது சலாவுதீனின் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

முன்னதாக, காஷ்மீரில் பிரிவினைவாத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததோடு, காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிரான அணு ஆயுதப் போரை நடத்தப்போவதாக,  2016-ம் ஆண்டு அறிவித்தவர்தான் சலாவுதீன். காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல், அங்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு  சையத் சலாவுதீன் பின்புலமாகவும் இருந்துவந்தார்.

இதன் காரணமாக, சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டுமென இந்தியா தொடர்ச்சியாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு