செய்தி விவரங்கள்

கைதிகள் பிடிபட்டுள்ளனர்

கடந்த செவ்வாய் அன்று இரு சிறைச்சாலை அதிகாரிகளை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடிய இரு கைதிகள் இப்பொழுது பிடிபட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன .

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றப்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இதை அடுத்து அமெரிக்கா முழுவதும் தேடுதல் வேட்டை ஆரம்பமானதுடன் , தப்பியவர்கள் ஆயுததாரிகள் என்று பொதுஜனம் எச்சரிக்கப்பட்டது.

நேற்று வியாழனன்று இரு கைதிகளும் ஒரு காரை துரத்திப் பிடித்ததில் , கைதாகினார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர் . மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை .

முறையே 42, 58 வயதான இரு பொலிஸ் அதிகாரிகளே இவர்களால் கொல்லப்பட்டவர்கள்  என்று சொல்லப்படுகின்றது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு