செய்தி விவரங்கள்

பயிற்சியாளரை கொன்ற புலி வீடியோ பதிவு - வனஉயிரியல் பூங்காவில் கொடூரம்!

கிழக்கு சீனாவில் ஃபியூஜின் மாகாணத்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் பணிபுரிபவர் வூ.இவர் வன விலங்கு பயிற்சியாளர் மற்றும் பாதுகாவலர்,இரும்பு கம்பிகள் போடா பட்ட புலியின் கூண்டுக்குள் இவர் வழக்கம் போல் புலிக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக புலி அவரை தாக்கி கழுத்தை கவ்வியத்தில் இவர் மூர்ச்சையாகி உயிர் இழந்தார்.

பயிற்சியாளரை கொன்ற புலி வீடியோ பதிவு - வனஉயிரியல் பூங்காவில் கொடூரம்!

கூண்டிற்கு வெளியே நின்ற இவரது துணை பயிற்சியாளர் கூக்குரலிட புலி அவரை தாக்கும் வீடியோ காட்சி பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புலி குட்டியாக இருந்தபோதிலே இந்த பயிற்சியாளர் தான் இதனை வளர்த்தவர் என்பது குறிப்படத்தக்கது.

உயிரியல் பூங்காவின் அதிகாரிகள், எப்போதும் சாந்தமாக, மனிதர்களோடு இருக்கு சிறு வயது முதலே நன்கு பழக்கப்படுத்த பட்ட புலி இப்படி செய்தது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று வருந்தியுள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் தன சீனாவில் மற்றொரு உயிரியல் பூங்காவில் உள்ள புலி ஒருவரை கொன்றதாக செய்தி வெளியானது, தொடர்ந்து வந்திருக்கும் இந்த செய்தி சீனாவின் இத்தகைய ஆபத்தான விலங்குகளை பூங்காவில் கையாள்வதற்குண்டான போதிய வசதிகளை கேள்விக்குறியாக்குகின்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு