செய்தி விவரங்கள்

பிரக்சிற் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெறும் - பிரதமர் மே

பிரக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்ட திகதியில் ஆரம்பிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பிரதமர் மேயின் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய போதிலும், ஜனநாயக யூனியனிஸ்ட்க் கட்சியுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய நிலையில், அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸட் கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பது தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனிற்கும், பிரித்தானிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பும் நேற்றைய தினம் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின்போதே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி, பிரித்தானியா தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டால் அதனையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க விரும்பினால், அதற்கான கதவு பிரித்தானியாவிற்கு எப்போதும் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனினும், பிரெக்சிற பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதிலிருந்து பின்வாங்குவது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஆட்சிக்காலம் நிறைவடையும் முன்னரே பலமான ஆட்சியை நிரூபிக்கும் வகையில் பிரதமர் தெரேசா மே முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, கடந்த வாரம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

எனினும் நடைபெற்ற இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியிருந்தன.

650 தொகுதிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் 318 தொகுதிகளில் வெற்றிபெற்ற தெரேசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, எட்டு ஆசனங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியது.

இதன்படி, பத்து தொகுதிகளில் வெற்றிபெற்ற அயர்லாந்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதமர் மே எலிசபெத் மகாராணியிடம் கோரிக்கை விடுத்தார்.

தெரேசா மேயின் குறித்த கோரிக்கைக்கு  மகாராணியும் ஒப்புதல் அளித்திருந்தார்.

இதனையடுத்தே, ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் ஆதரவை உறுதிபடுத்தி உடன்பாடொன்றை எட்டும் வகையில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

பிரித்தானியா தனது தீர்மானத்தை மாற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில்

இடம்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பில் பரிஸில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு