செய்தி விவரங்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்; இருதரப்பிலும் அறுபதுக்கும் மேல் பலி!

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாநிலமான கந்தஹாரில் உள்ள சோதனைச் சாவடி மீது தலிபான் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 22 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் 15 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் மாநிலத்தின் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில் 45 க்கும் மேற்பட்ட தலிபான்கள் உயிரிழந்துள்ளதாகவும், 30 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்த தாக்குதலில் தாங்கள் தான் நடத்தியதாக தலிபான்கள் இயக்கும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த தாக்குதலின் போது, ஒரு சோதனைச்சாவடியையும் தலிபான் இயக்கம் கைப்பற்றவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்; இருதரப்பிலும் அறுபதுக்கும் மேல் பலி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்; இருதரப்பிலும் அறுபதுக்கும் மேல் பலி!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு