செய்தி விவரங்கள்

லண்டனில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் 7 பேர் பலி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 7 பேர் பரிதாபமாகப் பலியாகினர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை அப்போதே லண்டன் போலீசார் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட தீவிவாதிகளில் குர்ரம் பட் , ரஷீத் ரெடோன் என்று 2 பேரின் அடையாளம் தெரிந்தது. இவர்களில் குர்ரம் பட் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன். இங்கிலாந்து குடியுரிமை பெற்றவன். கிழக்கு லண்டனில் பார்க்கிங் பகுதியில் பல ஆண்டுகளாக தங்கியிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

ரெடோனும் பார்கிங் பகுதியில் தங்கியிருந்தான் என்றும், அவன் மொராகோ - லிபியா பெற்றோருக்கு பிறந்தவன் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை 12 பேரை கைது செய்துள்ளனர்.
காய்த்தானவர்களின் 7 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் லண்டனில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்பதை கண்டறிய, போலீசார் விசாரணை வளையத்தை விரிவுப்படுத்தி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு