செய்தி விவரங்கள்

துருக்கியில் தேடுதல் வேட்டையில் சிக்கினர் ஐ.எஸ் தீவிரவாதிகள்

துருக்கியில் பொலிசார் முன்னெடுத்த பாரிய தேடுதல் நடவடிக்கையின் பயனாக சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ் ஆயுததாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் நேற்றைய தினம் குறித்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்ட்டுள்ளது.

ஆயுததாரிகள் பதுங்கியிருக்கலாமென பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளின் அமைதியை சிர்குலைக்கும் பொருட்டு பல ஆயுதாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஆயுததாரிகள் துருக்கியில் ஊடுருவி தமது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு தீவிரமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் ஆயுததாரிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு துருக்கி பொலிசார் தீவிரவாதத்திற்கு எதிராக பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் அண்மைக் காலங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆயுததாரிகளை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களில் சுமார் 3 ஆயிரம் பேரை நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு