செய்தி விவரங்கள்

தமிழர்கள் மத்தியில் நடந்த திடுக்கிடும் விடயம்!கபட நாடகம் அம்பலம்!சாட்சாத் கெவின்

கண்சவேட்டிவ் கட்சியில் இடம்பெற்ற அங்கத்துவ மோசடி தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள சத்தியப்பிரமாணத்தின் படி சாட்சாத் கெவின் ஓலறியே இந்த முயற்சியின் முழுமுதல் நாயகன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர் சமூகத்தையும் சீக்கிய சமூகத்தையும் முன்வைத்தே கெவின் ஓலெறி தெரிவித்த குற்றச்சாட்டுக்களை சில ஊடகங்கள் கொண்டு சென்றிருந்தன

இதற்குப் பதிலிருந்த கனடியத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவரான திரு.பாபு நாகலிங்கம் அவர்கள் இவ்வாறானதொரு கேவலமான விடயத்தில் தமிழர்கள் ஈடுபட்டிருக்கமாட்டார்கள், இது தோற்கப்போகும் வேட்பாளர்களின் குரலே எனத் தெரிவித்திருந்தார்.

அதனை 100 விழுக்காடும் நிரூபிப்பது போல சத்தியப்பிரமாணத்தின் மூலம் பிரகடனப்படுத்த விடயத்தின் படி கெவின் ஓலறி என்பவரிற்கு ஆதரவாக சீக்கிய சமூகத்தில் அங்கத்துவர்களை இணைத்தவர் தங்களிடம் பணம் பெறாமல் அங்கத்துவத்தை சேர்ந்ததாக ஆறு சீக்கியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல தமிழர்களின் தலைமையிடம் பேரம் பேசிய ஒட்டாவா ராஜ் எனப்படும் நபர், கனடாவிலுள்ள தமிழ் அமைப்புக்கள் தமிழர்களிற்கு ஏதும் செய்யவில்லை. இரண்டு பிரதான தமிழ் அமைப்புக்களும் நாட்டில் இன்னலும் மக்களிற்கோ அல்லது கனடிய தமிழ் மக்களிற்கோ ஏதும் செய்யவில்லை என்றும், அவர்கள் தங்களிற்கான வருவாயைப் பெறுவதற்காகவே இவ்வாறு வேடமிடுகின்றார்கள், இது தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆகாத விடயமென்றும்,கெவின் ஓலறி தனது வாடிக்கையாளர் [client] என்றும், எனவே கெவின் ஓலறியுடன் இணைந்து பணியாற்றினால் இந்த விவகாரத்தில் வெற்றி பெறலாம் என்றும் கெவின் ஓலிறிக்கு நெருக்கமான மிகப்பணபலமுள்ள [Billionaires] இரண்டு கனடியர்கள் இந்த விவகாரத்தில் “உதவக்” காத்திருப்பதாகவும் ஆசை வார்த்தைகள் காட்டியதோடு, தன்னோடு நாடு கடந்த அரசாங்கப் அமைச்சரெனக் கூறி தன்னுடன் துணைக்கு நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த ஆசைவார்த்தைகளிற்கு இணங்காமல், உங்களுடன் இணைவதற்கு எங்களிற்கு விருப்பமில்லை. நீங்கள் இதுவரை உங்களுடன் இணைந்திருந்தவர்களையே காட்டிக் கொடுக்கின்றீர்கள். எனவே நாளை எங்களையும் உங்களது பேரத்தின் பேசுபொருளாக எடுத்துக் கொள்வீர்கள். எங்களிற்கு இந்த விடயத்தில் உடன்பாடில்லை என்று தெரிவித்தாகவும் இதனை பகிரங்கப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இனிவரும் நாட்களில் கனடாவையே உலுப்பப் போகின்ற செய்திகளைத் தரும் விடயத்தை ஒரு கட்சியின் தலைவராக விரும்பும், அதேவேளை கனடாவின் இரண்டாம் மொழியான பிரெஞ்சு பேசத் தெரியாத, கெவின் ஓலறி சந்திக்கவுள்ளார். குறிப்பாக இவர் தலைமைத்துவ வேட்பாளர்களிற்கான பிரெஞ்சு மொழியிலான விவாதம் நடைபெற்ற பிறகே தன்னை வேட்பாளராக அறிவித்திருந்தார்.

கனடாவில் சிறுபாண்மையினரான பிரெஞ்சு மக்களின் மொழி பேசத் தெரியாதவர் தலைமைக்கு வந்தால் கனடா இரண்டாகப் பிளவுபடும் சாத்தியம் அதிகமே உள்ளது. இறுதியாக கனடா இரண்டு தேசங்களாகப் பிரிவதற்கு நடந்த வாக்கெடுப்பில் 50.1 வீதத்தினர் எதிர்த்து வாக்களிக்க, 49.9 வீதத்தினர் பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். எனவே கனடாவின் இணைவு என்பது சில ஆயிரம் வாக்குகளில் தங்கியுள்ள வேளை, இவ்வாறான வேட்பாளர்கள் மக்களால் வரவேற்கப்படமாட்டார்கள் என்பது உண்மையாகும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு