செய்தி விவரங்கள்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சூமாவை பதவி விலுகுமாறு கோரிக்கை

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகோப் சூமாவை பதவி விலகுமாறு அந்நாட்டின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முறைப்படி கோரிக்கை விடுக்கவுள்ளது.

இருப்பினும், பதவி விலகலை ஷுமா ஏற்றுக்கொள்வாரா என்பது தொடர்பாகத் தெளிவாகத் தெரியவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெகோப் சூமா தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த  2009ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அவரை பதவி விலகுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக  ஜெகப் சூமா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து கடந்த டிசெம்பரில் ஜனாதிபதி சூமா நீக்கப்பட்டதுடன், அக்கட்சிக்குப் புதிய தலைவராக துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி சூமாவின் பதவி விலகல் தொடர்பாக, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அதன் திட்டத்தை இதுவரையில் வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி சூமாவை பதவி விலுகுமாறு கோரிக்கை

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு