செய்தி விவரங்கள்

வடகொரியாவின் நட்பு நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும்-அமெரிக்கா

வடகொரியாவுடன் வணிக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெளியுறவுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வடகொரியாவுடன் சட்ட விரோதமாக வணிக செயற்பாடுகளை முன்னெடுக்கும் நாடுகளுக்கு எதிராக தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் வெள்ளை மாளிகை விரைவில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை திட்டங்களை மேற்கொண்டுவரும் வடகொரியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

இந்த நிலையிலேயே குறித்த புதிய தடை தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு