செய்தி விவரங்கள்

அடுக்கு மாடிக் கட்டட தீவிபத்தில் பலியானோர் தொகை 12ஆக உயர்வு

நேற்று அதிகாலை இலண்டன் மேற்கிலுள்ள அடுக்குமாடிக்  கட்டடம் தீப்பற்றிக் கொண்டதால்,  பலியாகியோர் தொகை 12ஆக அதிகரித்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளார்கள் .தீயணைப்பு படையினர்65 பேரை அங்கிருந்து மீட்டுள்ளார்கள் .

120குடியிருப்புகளைக் கொண்ட இந்த மாடிக் கட்டடத்தில் தீப்பிடித்தபோது, அநேகமானவர்கள்-அதாவது நூற்றுக் கணக்கானவர்கள்  உறங்கிக் கொண்டிருந்துள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 18பேர் நிலமை மோசமாக இருப்பதாக கூறப்படுகின்றது . இதில் ஜெசிக்கா என்ற பெயர் கொண்ட 12வயதுச் சிறுமியும் உள்ளடக்கம் . ஒரு பிள்ளை சாரளமூடாக வெளியே வீசப்பட்டபோது  அங்கு நின்ற பொதுமக்களில் ஒருவர் ஏந்திப் பிடித்ததாக நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார் .

ஆரம்பத்தில் கட்டடம் சரிந்து விழும் என்ற பயப்பிராந்தி ஏற்பட்டிருந்தாலும் , அப்படி நிகழ வாய்ப்பில்லை என்று இப்பொழுது கூறப்படுகின்றது . ஏறத்தாழ கட்டடத்தின் முழுப் பகுதியும் தேடப்பட்டு விட்டது என்று தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 தீ பிடித்தமைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு