செய்தி விவரங்கள்

நொவாகோஷியாவில் மாநிலத் தேர்தல் - பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்

கனடாவின் நொவாகோஷியாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாநிலத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நொவாகோஷியாவில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொவாகோஷிய தேர்தல் சட்டங்களின் பிரகாரம் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் நடைபெறும்.

எனவே, அதற்கான ஏற்பாடுகள் நேற்று முன் தினமே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதனடிப்படையில் நேற்றைய தினம் நொவாகொஷிய மாநிலத்தின் முக்கிய 3 கட்சிகள் தமது பிரசாரங்களை அரம்பித்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் லிபரல் அரசின் வரவு செலவுத்திட்ட அறிவிப்புக்கள் வெளியாகிய மூன்று தினங்களில், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு