செய்தி விவரங்கள்

வடகொரியா தென்கொரியா எல்லையில் வடகொரியா அதிபர் மற்றும் டிரம்ப் சந்திப்பு!

வடகொரியா தென்கொரியா எல்லையில் வடகொரியா அதிபர் மற்றும் டிரம்ப் சந்திப்பு!

 

வடகொரியா மற்றும் தென்கொரியா எல்லையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை, அமெரிக்கா அதிபர் டிரம்ப் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் 65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பதுதான்.

இந்நிலையில் தென்கொரியா அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை மேற்கொண்ட டிரம்ப், நேற்று வடகொரியா அதிபருடன் பேச்சுவார்ததை மேற்கொள்வதற்காக நாள் மற்றும் நேரம் 4 வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் வடகொரியா மற்றும் தென்கொரியா எல்லையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை அமெரிக்கா அதிபர் டிரம்ப் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு