செய்தி விவரங்கள்

தெரேசா மேயின் ஆலோசகர்கள் இருவர் .தமது பதவிகளை துறந்தனர்.

பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயின் ஆலோசகர்கள் இருவர் தமது  பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தெரேசா மேயினால் உருவாக்கப்பட்ட செற்குழுவில் பிரதான ஆலோசகரான நிக் திமதி மற்றும் பியோனா ஹீல் ஆகியோரே இவ்வாறு தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

குறித்த இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்வது தொடர்பில் எழுத்து மூலமான அறிவிப்பை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை பிரித்தானியாவில் பொதுத் தெர்தல் இடம்பெற்றிருந்தது.

குறித்த தேர்தலில் 650 தொகுதிகள் கொண்ட பிரி்த்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி 319 ஆசனங்களையும் ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி 261 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

அதிகப்படியான ஆசனங்களை தெரேசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பெற்றுக்கொண்டுள்ள போதிலும் பெரும்பான்மையை நிருபிக்க தவறி விட்டது.

இதனால் குறித்த இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு