செய்தி விவரங்கள்

லண்டனில் 3 பயங்கரவாதிகள் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த மக்கள்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாகனத்தால் மோதியும், கத்தியால் குத்தியும் 3 பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 8-ஆக உயர்ந்தது. பிரிட்டனின் புகழ் பெற்ற லண்டன் பாலத்தில் 3 பயங்கரவாதிகள் வேனை ஒட்டி வந்து மக்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள புகழ்பெற்ற பரோ சந்தைப் பகுதியில் பொதுமக்களை அவர்கள் மூவரும் கத்தியால் குத்தினர். இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் உடலை தேம்ஸ் நதியிலிருந்து போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனர். அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜேவியர் தாமஸ் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு