செய்தி விவரங்கள்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் - மேலுமொரு சந்தேக நபர் கைது

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை பிரித்தானிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் கிழக்கு பகுதியான நியுஹம் பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டன் நியூஹம் பகுதியில் இன்று பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது குறித்த சநபர் கைது செய்யயப்பட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த 18 பேரில் ஐவர் மாத்திரமே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 12 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் பின்னர் குற்றச்சாட்டுக்கள் எவையும் பதிவு செய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை மற்றுமொரு நபர் போதை மருந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடத்தப்பட் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் 48 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஆயுததாரி இயக்கம் உரிமைகோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு