செய்தி விவரங்கள்

தென்கொரியாவிற்கு நன்றிகளை தெரிவித்தார் வடகொரிய ஜனாதிபதி

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட வடகொரியாவிற்கு சிறப்பான வரவேற்பளித்த தென்கொரியாவிற்கு தனது நன்றிகளை வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் வுன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் பியோங்யோங் மாநிலத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன.

பல கட்ட பேச்சுக்களின் பின்னர் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு வடகொரியா சம்மதித்த நிலையில் தனது வீரர்களை அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக  சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் வுன்னின் சகோதரி கிம் யோ ஜொங் மற்றும் வடகொரிய விழாக் குழுவின் தலைவர் கிம் ஜொங் நாம் ஆகியோர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் வடகொரியாவுக்குத் திரும்பியிருந்தனர்.

இதனையடுத்தே, தென்கொரியாவுக்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் வுன் நேற்று திங்கட்கிழமை நன்றிகளை தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரியக் குழுவினரைக் கவரும் வகையில், தென்கொரியா நடந்துகொண்டமைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடகொரிய குழுவினரின் விளையாட்டு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தமைக்கும், நன்றி தெரிவிப்பதாக வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவிற்கு நன்றிகளை தெரிவித்தார் வடகொரிய ஜனாதிபதி

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு