செய்தி விவரங்கள்

இர்மாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தேவை - பிரான்ஸ் ஜனாதிபதி

இர்மா புயலினால் பாதிக்கப்பட்ட தமது ஆளுகைக்கு உட்பட்ட கரிபியன் தீவுகளுக்கான நிவாரணப்பணிகளை பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பிரத்தானியா ஆகிய நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தமது நடவடிக்கைகளை குறித்த நாடுகள் துரிதப்படுத்தியுள்ளன.

இதேவேளை, இர்மா புயலினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸிற்கு சொந்தமான தீவுகளை அந்நாட்டு ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல்களை தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகளவான நிவாரணங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரிபியன் தீவுகளில் இர்மா என்று பெயரிடப்பட்ட புயல் தனது கோரத்தாண்டவத்தை நடத்தியிருந்தது.

இந்த புயிலின் தாக்கத்தினால் கடுமையான சோதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 10 பேர், பிரான்ஸ் அரசாங்கத்திற்கு சொந்தமான தீவுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை துவம்சம் செய்துள்ள நிலையில், புளொரிடா மாநிலமும் முற்றாக முடங்கிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு