செய்தி விவரங்கள்

உலகின் முன்னனி நிருவன சிஇஓகளைச் சந்தித்தார் பிரதமர் - தொழில் துவங்க அழைப்பு.!

இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. இவர் நேற்று, கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, அமேசான் நிறுவன ஜெப் பெஸோஸ், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், சிஸ்கொ நிறுவனத்தின் ஜான் சாம்பர்ஸ் உள்ளிட்ட உலகின் 20 தொழில் நுட்ப நிறுவனங்களின் சிஇஓகளைச் சந்தித்து பேசினார்.

அவர்களுடனான ஆலோசனையின் போது, கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளின் விளைவாக, இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) இந்தியா ஈர்த்ததாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவில் தொழில் துவங்க உள்ள வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தமது ட்வீட் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் உலகமே இந்தியாவின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை உலகமே உற்றுநோக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்டவற்றின் மூலம் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்க மோடி அரசு முனைவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு