செய்தி விவரங்கள்

அதிகமான அலைபேசி பயன்பாட்டால் அச்சுறுத்தும் முதுகெலும்பு பிரெச்சனைகள் !

அமெரிக்காவில், அதிகமாக அலைபேசி பயன்படுத்துவது குறித்த ஆய்வில், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய சமூகத்தில் அனைவருமே அலைபேசி பயன்படுத்தி வரும் நிலையில், அவற்றை இயக்குவதற்கு ஒரு நபர் குனிந்து நீண்ட மணி நேரங்கள் பார்த்து கொண்டேனா இருப்பது, அவர்களுக்கு தீவிரமாக முதுகெலும்பு வலுவிழப்பது போன்ற பிரெச்சனைகள் வருவது கண்டறிய பட்டுள்ளது.இவ்வாறு ஒருவர் அலைபேசி பயன்படுத்தும் போது அவர்களின் தலை குவிந்திருக்கும் அளவுக்கேற்றது போல் அவர்கள் ஒரு சுமையை முதுகில் சுமந்து கொண்டிருப்பது போன்றது என்கிறார்கள்.

அதிகமான அலைபேசி பயன்பாட்டால் அச்சுறுத்தும் முதுகெலும்பு பிரெச்சனைகள் !

ஒரு நபர், இப்படி குனிந்து அலைபேசி திரையை பல மணி நேரங்கள் பார்ப்பதால், அவரது கழுத்து பகுதியில், கடும் அழுத்தும் அதிகரித்து, இதனால் கழுத்து வலி,நரம்பு சுருட்டல், முத்தெழம்பு தட்டுகளில் இறக்கம்,தலைவலி,பதட்டம், மனஅழுத்தம், ரத்த அழுத்தம், இதய கோளாறு வரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக சொல்ல படுகிறது.

அதிகமான அலைபேசி பயன்பாட்டால் அச்சுறுத்தும் முதுகெலும்பு பிரெச்சனைகள் !

அமெரிக்கா மருத்துவர்கள் "Text neck " எனப் பெயரிட்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு முகத்துக்கு நேராக கழுத்தும் முதுகு தாண்டும் வளையாமல், அலைபேசியை பிடித்து பயன்படுத்துவதே ஆகும் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளுக்கும் வீட்டில் உண்பது, உடுப்பது போல், இதற்கும் பயிற்சி அளித்து வளர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

அதிகமான அலைபேசி பயன்பாட்டால் அச்சுறுத்தும் முதுகெலும்பு பிரெச்சனைகள் !

மருத்துவம் எவ்வளவு வளர்ச்சியினை கண்டாலும், நோய்களும் நோய்க்கான காரணங்களும் சரி சமமாக வளர்ந்து வரும் இக்காலங்களில், நாம் சாதாரணமாக அலைபேசி பார்ப்பது இதயத்தில் கோளாறினை ஏற்படுத்தலாம் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு