செய்தி விவரங்கள்

அணுசக்தி பலத்தை வட கொரியா பெற்றுக் கொள்வதை ரஷ்யா விரும்பவில்லை

ஐநா சபை தடைகளைத் தொடர்ந்து , இராணுவத்தை இரட்டை மடங்கு பலமாக்குவோமென வட கொரியா சூளுரைத்துள்ளது . ஐநா சபையின் அண்மைய தீர்மானம் , , நாம் எடுத்த பாதை சரியானதுதான் என்பதை நிரூபிப்பதாக, வட கொரியா கூறி இருக்கின்றது. சென்ற திங்களன்று ஐநா சபை வடகொரியாவின் துணி ஏற்றுமதியை தடைசெய்ய தீர்மானம் கொண்டுவந்ததோடு, வட கொரியா இறக்குமதி செய்யும் மசகு எண்ணையின் அளவையும் கட்டுப்படுத்தி இருக்கின்றது . வட கொரிய வெளிநாட்டு அமைச்சின் சமீபத்திய அறிக்கையின்படி , நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க, தமது இராணுவ பலத்தை இரண்டு மடங்காக்க முயற்சிப்பதாக பிரஸ்தாபித்துள்ளார் . ஐநா எடுத்த தீர்மானம் சட்டத்துக்கு விரோதமானது . கெட்டது என்று கூறும்  வட கொரிய அரசு. “இது நிச்சயமாக அமெரிக்காவினால், இல்லாதது பொல்லாததை சொல்லி ,  வழிநடத்தப்பட்டு எடுத்த ஒரு முடிவு . எம்மை சீண்டி விட எடுத்த ஒரு நடவடிக்கை இது. தமது சுய பாதுகாப்புக்காக வட கொரியா எடுக்கும் முயற்சிகளை முடக்கு அதன் பொருளாதாரத்தை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டது” என்று இந்த அறிக்கையில் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார் .

வடகொரிய அமைச்சின் கருத்துப்படி இந்தத் தீர்மானம் , அது தேர்ந்துள்ள பாதை சரியானது என்று உறுதிப்படுத்தவும் ,அந்தப் பாதையிலேயே கடைசிவரை செல்வதை வெளிப்படுத்தவும் வழி வகுத்துள்ளது என்று அவர்கள் நம்புவதை வெளிக்காட்டி இருக்கின்றது .

அணுசக்தி பலத்தை வட கொரியா பெற்றுக் கொள்வதை ரஷ்யா விரும்பவில்லை என்று கூறும் ஐநாவுக்கான ரஸ்சிய தூதர் நேபென்சியா , அதே நேரத்தில் , இந்தத் தடையால் பெரிதாக எதைச் சாதிக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு