செய்தி விவரங்கள்

ரொறொன்ரோ பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் மூடுபனி எச்சரிக்கை விடுத்துள்ளது

ரொறொன்ரோ பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் மூடுபனி எச்சரிக்கை விடுத்துள்ளது. தெரிவு நிலை கிட்டத்தட்ட பூச்சியத்தில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ, ஹமில்ரன் மற்றும் ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கும் இந்த அறிவித்தல் செவ்வாய்கிழமை காலை விடுக்கப்பட்டுள்ளது. லேசான காற்று திணிவு உருகும் பனியுடன் கூடிய மழையை ஏற்படுத்தும் எனவும் இதன் காரணமாக பூச்சிய தெளிவு தன்மை சில பகுதிகளில் 200மீட்டர்கள் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடு பனி அபாயகரமான வாகனமோட்டுதலிற்கு வழி வகுக்கலாம் என தேசிய வானிலை நிறுவனம் தெரிவிக்கின்றது.வாகனம் செலுத்திக் கொண்டிருக்கையில் தெளிவு நிலை குறைபடுமாயின் சுடர்களை ஆன் செய்து பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

விமான பயணிகளை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு பயண நேர மாற்றங்களை தெரிந்து கொள்ளுமாறு பியர்சன் சர்வதேச விமான நிலையம் தெரிவிக்கின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு