செய்தி விவரங்கள்

ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான் அரசு!

ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான் அரசு!

பாகிஸ்தானில் இருந்து செயற்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டுன் நடத்தப்பட்ட தாக்குதலிற்கு மூளையாக செயற்பட்டார் என கூறி ஹபீஷ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா அறிவித்தது.

அத்துடன் லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐ.நா தடை விதித்தது.

இந்நிலையில் ஹபீஸ் சயீத் மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ள தனி நபர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புக்களை தடை செய்ய வகை செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ளார்.

மேலும் ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையமும் உறுதி செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு