செய்தி விவரங்கள்

அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்- இவான்கா ட்ரம்ப்

அரசியலில் இருந்து விலகியிருக்கவே விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளும் ஜனாதிபதியின் உதவியாளருமான இவன்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றால் அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியலில் முற்றுமுழுதாக நேரத்தை செலவிடுவதில் தனக்கு ஆர்வம் இல்லை எனவும் ஜனாதிபதியுடைய அரசியல் முன்னெடுப்புக்கள் தனிச் சிறப்புடையவை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த செயற்பாடுகள் யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும், ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பை நினைத்து நான் பெருமையடைவதாகவும் தெரிவிததுள்ள அவர் அரசியலில் நிலைத்திருக்கும் விருப்பம் தனக்கில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு