செய்தி விவரங்கள்

கட்டார் மீது விதித்துள்ள தடைகளை தளர்த்துங்கள் - ரெக்ஸ் டில்லர்சன்

கட்டார் மீது வளைகுடாவைச் சேர்ந்த அரேபிய நாடுகள் விதித்துள்ள தடையை தளர்த்த வேண்டுமென அமெரி்க்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மனிதாபிமானத்திற்கு எதிரானது எனவும், இதனால் பல பின்விளைவுகள் வரும் எனவும் தெரிவித்துள்ள அவர் குறித்த தடைகளை தளர்த்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத குழுக்களுக்கு கட்டார் நிதியுதவி அளித்து வருவதாகவும், மறைமுகமாக ஆதரவளித்து வருகின்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து கட்டார் மீது எகிப்து, சவூதி மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் பல்வேறுபட்ட தடைகளை விதித்துள்ளன.

அத்துடன் கட்டார் நாட்டுடனான தூதரக உறவை ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து, யேமன் உள்ளிட்ட நாடுகள் திடீரென துண்டித்தன.

இதனை தொடர்ந்தே அமெரிக்கா இராஜாங்க செயலாளர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டார் ஆயுததாரி குழுக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் அதனை நிறுத்துமாறும் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் கட்டார், ஆயுததார அமைப்புக்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு