செய்தி விவரங்கள்

கனடாவில் மது போதையில் பயணிகள் விமானத்தை ஓட்ட ஆசைப்பட்ட விமானி கைது

கனடாவில் மது போதையில் பயணிகள் விமானமொன்றை செலுத்த முற்பட்ட விமானியொருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் கல்கரியில் இருந்து மெக்சிக்கோ நோக்கி பயணிக்க இருந்த சலுகை அடிப்படையிலான சன்விங் என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் விமானியே மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விமானம் பயணிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்தை செலுத்தும் அறையில் இருந்து குறித்த விமானி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த விமானி, வரையறை செய்யப்பட்டுள்ள அளவை விட மும்மடங்கு அதிகமாக மதுபானத்தை அருந்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 100 ற்கும் அதிகமான பயணிகள் இருந்ததாகவும் கனேடியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விமானியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட விமான பணியாளர், அது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்திய நிலையில், விமான செலுத்தும் அறையில் இருந்து குறித்த விமானி உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

விமானத்திற்கு பொறுப்பான விமானியாக இருந்த போது பலவீனமாக இருந்ததாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிலோவாக்கியாவைச் சேர்ந்த 37 வயதான மிரோஸ்லவ் ஜிரோனிச் என்ற விமானியே கல்கரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனர்த்தமொன்று ஏற்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்ததாக கல்கரி பொலிஸ் பேச்சாளர் போல் ஸ்ரெய்சி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு