செய்தி விவரங்கள்

வயல்களில் அகோரமாக அலைந்த பயங்கர நாயைத் தெரியுமா?

வயல்களில் அகோரமாக அலைந்த பயங்கர நாயைத் தெரியுமா?

விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

65 சென்டிமீட்டர் நீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினை போல முடியையும், சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது என அசஹி டிவி கூறுகிறது.

காட்டுப்பன்றிகளிடம் இருந்து அரிசி மற்றும் செஸ்நட் பயிர்களைக் காப்பாற்ற இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜப்பான் கிழக்கில் உள்ள கிசாருசு நகரத்தில் உள்ள வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது.

விலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருதுவடன், ஊளையிடவும் தொடங்கும். இதனால் இதனை பயங்கர நாய் என கூறுகின்றனர். சூரிய ஆற்றல் மின்கலத்தின் மூலம் இது செயல்படும்.

இந்த ரோபோ ஓநாய் இருக்கும் பகுதிகளில், பயிர் இழப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டன என ஜப்பான் விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்பு கிசாருசு நகரத்தில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டு விளையும் பயிர்களில் ஒரு பகுதியை காட்டுப்பன்றியிடம் இழந்து வந்தனர்.

ஒரு மின் வேலினை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது. இப்போது, ரோபோ ஓநாய் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் இதன் விலை, 4,840 அமெரிக்க டொலர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வயல்களில் அகோரமாக அலைந்த பயங்கர நாயைத் தெரியுமா?

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு