செய்தி விவரங்கள்

நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 450 ஆக உயர்வு!!

நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 450 ஆக உயர்வு!!

ஈரான் மற்றும் ஈராக் பகுதிகளுக்கு இடையே நேற்று அதிகாலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரிலிருந்து 32கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலரும் கட்டிட இடர்பாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் அங்கு இறப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அதிகரித்துக்கொண்டே போகிறது. மீட்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 450 ஆக உயர்வு!!

மேலும் இடர்பாடுகள் காரணமாக மின்சாரம், தகவல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால் உறவினர்களை தொடர்புக்கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பது காண்போரை கண்கலங்க வைக்கிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு