செய்தி விவரங்கள்

சீன ஜனாதிபதி மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமருக்கிடையில் கலந்துரையாடல்

சீனா மற்றும் பிரத்தானியாவுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை சீன தலைநகர் பீஜிங்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த சீனா ஜனாதிபதி, சீனாவிற்கும், பிரித்தானியாவிற்கும் இடையில் உறவுகள் அதிகரித்துள்ளதுடன் ஆழமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய செயற்பாடுகளில் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வகையிலான மாற்றங்கள் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன், இரு தரப்புகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு மேலும் பல உறுதியான தீர்மானங்களை மெற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமருக்கிடையில் கலந்துரையாடல்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு