செய்தி விவரங்கள்

குர்திஷ் படையினருக்கு ஆயுதம் வழங்கி ஆதரவு வழங்கும் அமெரிக்கா

ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட குர்திஷ் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் பணியை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடான சிரியாவில் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ், சிரிய ராணுவம், குர்திஷ் படைகள் எனப் பல தரப்புகள், தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட ஒன்றுக்கொன்று பயங்கரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட குர்திஷ் படையினருக்கு ஆயுதங்கள் அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

ஐ.எஸ் ஆக்கிரமிப்பில் வடக்கு சிரிய பகுதியின் தலைமை இடமாக இருக்கும்  ரக்கா நகரத்தை மீட்கும் நோக்கில் ஆயுதம் அனுப்பப்படுவதாக அமெரிக்காவின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் துருக்கியின் எதிர்ப்பு காரணமான இத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு