செய்தி விவரங்கள்

சிரியாவில் வான் தாக்குதல் - 50க்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்!

சிரியாவின் மேற்கு அலெப்போ மாநிலத்தில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அராரெப் நகரின் சந்தைப் பகுதியை இலக்கு வைத்து நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில்  வான் தாக்குதல் -  50க்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்!

சிரியாவில் ஐ.எஸ் ஆயுததாரிகள் வசமிருக்கும் கட்டுப்பாட்டுப்பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

சிரிய இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்ய இராணுவத்தினரும் படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பொதுமக்களே அதிகம் உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் ரஷ்ய விமானம் பறப்பில் ஈடுபட்டதாக குறித்த பகுதியில் வசித்து வருகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை தாக்குதல் நடந்த இடம் முன்னாள் அல்குவைதா அமைப்பைச் சேர்ந்த ஜிஹாதிக் குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிரியாவில்  வான் தாக்குதல் -  50க்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்!

(File, AFP)

SYRIA-CONFLICT-ALEPPO

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு