செய்தி விவரங்கள்

ஆதியும் அந்தமுமாய் ஆகிப்போனவள் நீ.. அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

ஆதியும் அந்தமுமாய் ஆகிப்போனவள் நீ.. அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

பெண்ணொருத்தியின் நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பினை பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள். ஆம், இந்த கூற்று நூறு சதமானம் உண்மையும் கூட. அத்தகைய நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பினை பிற பெண்களிடமிருந்து சிலர் பெற்றிருக்கலாம் - பெறாமலும் கூட இருக்கலாம். ஆனால், நிபந்தனைகள் ஏதுமற்ற தாய்மையின் பேரன்பினை எவரும் பெறாமல் இருந்திருக்க முடியாது.

அத்தகைய தாய்மையின் மகத்துவத்தினை உலகினுக்கு உணர்த்திடவே இன்று உலகு முழுமைக்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆம், கருவாகி - உருவாகி, காண்போர் மெச்சிட தம் பிள்ளைகள் ஆளாகும் முன்னமிருந்தே, எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற பேரன்பினை செலுத்திவருகிற தாய்மையின் பேரன்பினுக்கு இவ்வுலகில் ஈடு - இணை ஏதுமில்லை.

தம் பிள்ளைகள் மற்றும் தமைச் சார்ந்தோரின் கனவுகளுக்காய், சந்தோஷங்களுக்காய் தன் கனவுகளை சமரசம் செய்துகொள்கிற, சந்தோஷங்களை மறந்துபோகிற தாய்மையின் பேரன்பு இவ்வுலகில் உன்னதுமானதும் - உயர்வானதும் கூட. எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நிலம் - உயிர் செழிக்க பொழியும் மழை போல அன்பை பொழிந்திடும் தாய்மார்களுக்கும் - அவர்தம் பிள்ளைகளுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு