செய்தி விவரங்கள்

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 6 பேர் பலி

மேற்கு லண்டன், கென்சிங்டன் வடக்குப்பகுதியில் உள்ள ஹ்ரன்ஃபெல்  அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ்ந்த நிலையில் குறித்த கட்டடத்தினுள்ள சிக்கியிருப்பவர்கள் அதிகம் என்பதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான கட்டடத்திற்குள் பலர் சிக்குண்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 50இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கு லண்டனில் லதிமேர் சாலையில் அமைந்துள்ள ஹ்ரன்ஃபெல் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தினையடுத்து மீட்பு நடவடிக்கைகளும், தீயணைப்பு செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில் குறித்த பகுதியை அண்மித்த பாதைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி ஏ40 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கட்டடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

விபத்திற்குள்ளான 24 மாடிக் கட்டடத்தில் 120 குடியிருப்புகள் காணப்படுகின்றதுடன் முழுக் கட்டடத்திலும் தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், குறித்த கட்டடம் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு