செய்தி விவரங்கள்

இஸ்லாமிய தீவிரவாதத்தை அழித்தொழிப்போம்- மோடி,ட்ரம்ப் சபதம்.!

அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். மேலும், இந்தியாவில் தொழில் துவங்க வருமாறும் அதற்கான ஒத்துழைப்பினை தனது அரசு அளிக்குமெனவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக, இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசினார் மோடி. இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

சந்திப்பிற்கு பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய இந்திய பிரதமர் மோடி "நாங்கள் பயங்கரவாதம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டோம். பயங்கரவாதம் மற்றும் அவர்களுடைய பாதுகாப்பு புகழிடங்களுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடுவது எங்களுடைய ஒத்துழைப்பின் முக்கிய பங்காகும்" என்று பேசினார்.

அவருக்கு பின் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு நட்புறவானது மிகவும் முக்கியமானது. இருநாடுகளும் பயங்கரவாதத்தின் தீமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பயங்கரவாத கொள்கைகளையும் அழித்தொழிப்போம் என தீர்மானித்து உள்ளாம். நாங்கள் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தை அழிப்போம்" என பேசினார்.

உலகின் வல்லமை வாய்ந்த இரு நாடுகள் தீவிரவாதிகளை அழித்தொழிப்போமென, வெளிப்படையாக அறிவித்துள்ளது, இன்றியமையாத ஒன்றாக உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு