செய்தி விவரங்கள்

வாகனங்களின் கரும் புகையால் பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து: அதிரும் எச்சரிக்கை!

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என பதினைந்தாயிரம்  விஞ்ஞானிகள் சேர்ந்து  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களின் கரும் புகையால் பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து: அதிரும் எச்சரிக்கை!

பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதற்கு சுற்றுப்புற சூழல் மாசுபாடே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் பயன்பாட்டால் வளிமண்டலத்தின் ஓசோன் படலத்தில் துவாரம் ஏற்பட்டு, அதனால் சூரியனின் வெப்பம் பூமியை தாக்குவதாகவும், காற்று மண்டலத்தில் ஏற்கனவே குறைவாக இருந்த மாசின் அளவு தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதுள்ளதாகவும்,  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பூமியில் அதிகரித்து வரும் மக்கட்தொகை பெருக்கமும், அவர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகையும் காரணமாகக் கூறப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பூமிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்படும்.

இதை 184 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் விஞ்ஞானிகள் கடிதம் மூலம், சுற்றுச்சூழல் மாசு காரணமாக வனப்பகுதிகள் அழியும், சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும், கடல்வாழ் உயிரினங்கள் அழியும், கடல்நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்படும், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என எச்சரிக்கையாக விடுத்துள்ளனர்.

கடந்த 1992 ஆம் ஆண்டு அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக இது போன்ற எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது 1700 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம்   ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு