செய்தி விவரங்கள்

அமெரிக்காவில் பயங்கரம்; பற்றி எரிகிறது கலிஃபோர்னியா! (படங்கள்)

அமெரிக்கா நாட்டின் கலிஃபோர்னியாவில் காற்றின் வேகம் காரணமாக பாரிய தீப்பிழம்புகள் மேலும் பரவி வரும் நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் பயங்கரம்; பற்றி எரிகிறது கலிஃபோர்னியா!  (படங்கள்)

குறித்த மாநிலத்தில் திராட்சைக் காடுகள் அதிகம் உள்ள அனாஹீம் மலைப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் வேகமாகப் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் 12 இடங்களில் பற்றி எரியும் தீ சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எரிந்து வருகிறது.

அமெரிக்காவில் பயங்கரம்; பற்றி எரிகிறது கலிஃபோர்னியா!  (படங்கள்)

திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த அனைத்து பகுதிகளிலும் தீ எரிந்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இத்தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

அமெரிக்காவில் பயங்கரம்; பற்றி எரிகிறது கலிஃபோர்னியா!  (படங்கள்)

இத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கரம்; பற்றி எரிகிறது கலிஃபோர்னியா!  (படங்கள்)

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு