செய்தி விவரங்கள்

அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா வரவேண்டும் - டேவிட் டேவிஸ் கருத்து

சர்வதேசத்தில் வல்லரசாக திகழும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கு அழைப்பது முக்கியமாகும் என பிரக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது விஜயத்தை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரக்சிற் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டேவிட், ட்ரம்பின் அரசியல் மற்றும் அவரது இராஜ தந்திர நடவடிக்கைகள் சகித்துக் கொள்ள முடியாத வகையில் இருப்பினும், சர்வதுசத்தில் வல்லரச நாடாக திகழும் அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற வகையில் அவரை நம் நாட்டுக்கு அழைப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரித்தானி தேர்தல் மற்றும் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கன்சர்வேட்டிவ் கட்சி அயர்லாந்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கின்ற நிலையில் அக்கட்சியின் கருத்துக்களுடன் ஒன்றினைந்து செயற்படுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், தாம் எமக்கு ஆதரவாக செயற்படுமாறே ஜனநாயக ஒன்றியக் கட்சியை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், அவர்களின் கொள்கைகளை நாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் நம்பிக்கை அடிப்படையில் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதே தவிர, கூட்டணியாக இணைந்து எமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனவும்  அவர் குறிப்பிட்டார்.

கடந்த 8ஆம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்றிருந்தது.

குறித்த தேர்தலில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 319 ஆசனங்களை பெற்று வெற்றியடைந்த போதும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டது.

இந்த நிலையில், அயர்லாந்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை கனசர்வேட்டிவ் கட்சி முன்னெடுத்து வருகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு