செய்தி விவரங்கள்

சீனாவின் இராணுவ நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது - ஜேம்ஸ் மட்டிஸ்

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவில் சீனா இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறித்த செயற்பாடுகளை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம் பெற்ற பாதுகாப்பு தொடர்பிலான் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், செயற்கைத் தீவுகளை இராணுவமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் நாடுகளை நாம் வரவேற்க மாட்டோம் எனவும் சர்வதேசச் சட்டத்தில் அதற்கு இடமில்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடகொரியாவின் மீது ஆதிக்கம் செலுத்தி அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென் சீன கடற்பிராந்தியத்திற்கு பல நாடுகள் உரிமை கோரி வருகின்ற நிலையில் சீனா குறித்த பகுதியில் செயற்கை தீவை அமைத்திருந்தது.

வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதே நேரம் சீனாவின் தென்சீனக் கடல் விவகாரம் தொடர்பில் ஆதிக்கம் செலுத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா மும்முரமாக உள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தோற்று விக்கப்பட்டுள்ளதுடன் சர்ச்சைகளும் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையிலேயே குறித்த தீவில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்களுக்கு அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு