செய்தி விவரங்கள்

சிரிய ஜெட் விமானமொன்றை சுட்டு வீழ்த்திய அமெரிக்க விமானம்

அமெரிக்க யுத்த விமானமொன்று நேற்று ஞாயிறன்று தென் ராக்கா பிராந்தியத்தில் சிரிய ஜெட் விமானமொன்றை சுட்டு வீழ்த்தி உள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .அமெரிக்காவின் ஆதரவுப் படைகள் மீது குண்டுகள் வீசப்பட்டமையே , இத் தாக்குதலுக்கான கரணம் என்று அமெரிக்கா கூறி இருக்கின்றது .

சிரிய இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட தொலைக்காட்சி அறிக்கையில் , விமானம் கீழே வீழ்ந்ததாகவும் விமான ஓட்டியைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . 2011இல் இந்த மோதல் ஆரம்பமான காலம் தொடக்கம் இன்று வரையிலான கால கட்டத்தில் முதல் தடவையாக வீழ்த்தப்படும் விமானம் இதுவாகும் .

ஏறத்தாழ மூன்று வருட காலமாக சிரிய நாட்டின்  கிழக்கு அலெப்போ பிராந்தியம் புரட்சிப் படையினர்  வசம் இருந்துள்ளது . இப் பிரதேசங்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கும் பணியிலேயே இப்பொழுது சிரிய இராணுவம் ஈடுபட்டுள்ளமை இங்கே குறிபிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு