செய்தி விவரங்கள்

வணிகக் கப்பலுடன் கடல்படைக் கப்பல் மோதல்

ஜப்பானிய கரையோரப் பகுதியில் , அமெரிக்க கடற்படைக் கப்பலொன்று  இன்னொரு வணிகக் கப்பலோடு மோதிய சம்பவத்தில் எழு மாலுமிகள் காணமல் போயிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன .

ஜப்பானிய அமெரிக்க விமானங்கள் , உலங்கு வானூர்திகள் தேடுதல் வேட்டையில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் , காணாமல் போன ஏழு அமெரிக்க மாலுமிகளின் கதி  இன்னும் அறியப்படவில்லை .

கொள்கலன்களுடன் வந்த பிலிப்பைன்ஸ் நாடு வணிகக் கப்பல் ஒன்று, அமரிக்க யுத்தக் கப்பலோடு சனிக்கிழமை அதிகாலை மோதி இருக்கின்றது . அமெரிக்க கப்பலின் கொமான்டர் உட்பட மூவர் காயப்பட்டது காரணமாக விமானம் மூலம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் .

ஜப்பானின்  தென்மேற்கே உள்ள  துறைமுக நகரமான யொக்கொசுகா என்னும் இடத்திலிருந்து 104கி.மீ. தூரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது .அமெரிக்க கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் , அமெரிக்க இழுவைப் படகுகள் மூலம் துறைமுகத் தளத்தை கப்பல் சென்றடைந்தது என்று சொல்லப்படுகின்றது .

 ஜப்பானிய நகரங்களான நாகோயாவுக்கும் டோக்கியோவுக்கும்  இடையில் பயணித்துக்கொண்டிருந்த,  222மீட்டர் நீளமான பிலிப்பைன்ஸ் நாட்டுக் கப்பல் திடீரென தன் திசையை மாற்றி பயணித்ததே மோதலுக்கான காரணம் என்று சொல்லப்படுகின்றது .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு