செய்தி விவரங்கள்

கட்டாரை தனிமைபடுத்தியமைக்கான காரணத்தை வெளியிட வேண்டும் - அமெரிக்கா

கட்டாரை தனிமைப்படுத்தியமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கோ அல்லது கட்டார் நாட்டிற்கோ வளைகுடா நாடுகள் தெரிவிக்காதமை தவறானது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹேதர் நௌரட் கட்டார் மீதான தடைகள் விதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இதுவரை தடைகளுக்கான காரணங்களை வளைகுடா நாடுகள் வெளியிடவில்லை என தெரிவிததுள்ளார்.

நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தடைகளுக்கான காரணங்கள் அல்லது விபரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது கட்டார் நாட்டிற்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பதை தாம் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நேரத்தில் இன்னும் கூடுதலாக கட்டார் மீதான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நடவடிக்கைகள் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், கட்டார் பயங்கரவாதத்திற்கும் ஆயுததார அமைப்புக்களுக்கும் ஆதரவாக செயற்பட்டு வருவதாக தெரிவித்து  சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பஹ்ரேன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர, வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை துண்டித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு