செய்தி விவரங்கள்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் - பிரித்தானியா முழுவதும் மௌன அஞ்சலி

லண்டன் பிரிட்ஜில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று பிரித்தானியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று உள்ளூர் நேரப்படி காலை 11.00 மணிக்கு பிரித்தானியா முழுவதும் குறித்த இந்த ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மௌன அஞ்சலியில் பிரித்தானியர்கள் அனைவரும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல்களில் காயமடைந்த மற்றும் இது போன்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரித்தானியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதை எடுத்துக்காட்டும் வகையிலேயே குறித்த அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு