செய்தி விவரங்கள்

அமெரிக்காவின் வான் தாக்குதலில் இரண்டு ரஷ்ய படையினர் பலியாகியுள்ளனர்.

சிரியாவின் வட கிழக்கு பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான் தாக்குதலில் 2 ரஷ்ய படையினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வான் தாக்குதலில் இரண்டு ரஷ்ய படையினர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் கூலிப் படையினரே இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரிய அரச ஆதரவு படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தனியார் இராணுவ நிறுவனங்கள் தம்மை பணிக்கு அமர்த்தியுள்ளதாக கூலிப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் ரஷ்யப் படையினர் பலியானதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்தியை ரஷ்யா உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தமது நாட்டு படையினர் நடத்திய விமானத் தாக்குதல்களில் 100 ற்கும் அதிகமான சிரிய ஆதரவு படையினர் பலியாகியுள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தது.

எவ்வாறாயினும் கொல்லப்பட்டவர்களில் ரஷ்யாவைச் சேர்ந்த கூலிப் படையினரும் உள்ளதாக வெளியான தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மெட்ரிஸ் உறுதிப்படுத்த மறுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு