செய்தி விவரங்கள்

ட்ரம்ப்பின் மனைவி இடத்தை பிடிக்க அமெரிக்க பெண்கள் படும் பாடு..???

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி போலிருக்க ஆசைப்பட்டு டெக்சாஸை சேர்ந்த ஒரு தாய் 8 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். அமெரிக்காவில் பீக்கில் இருக்கும் பெண்களைப் போல் தோற்றத்தை மாற்றிக்கொள்வது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபேஷன் என்றாலும் தற்போது தாய்மார்களும் தோற்றத்தை மாற்றும் பிளாஸ்க் சர்ஜரியை செய்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ட்ரம்ப் அதிபரான பிறகு அவரது மகள் இவான்கா போல் தோற்றத்தை மாற்றிக்கொள்ள ஏராளமான பெண்கள் ஆர்வம் தெரிவித்து பிளாஸ்டிக் சர்ஜரிகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில் டெக்ஸாஸை சேர்ந்த கிளாடியா சீரா என்ற தாய் ஒருவர் அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா போன்று இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். உருவ ஒற்றுமையில் மெலானியா போலவே உள்ள கிளாடியா தனது அழகை மேலும் மேம்படுத்தி அப்படியே மெலானியா போல் தோற்றமளிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக 8 அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

மார்பகத்தை குறைப்பது, மூக்கு மற்றும் உதட்டை சரிசெய்வது, தொப்பையை குறைப்பது மற்றும் கண்ணிமைகளை மாற்றியமைப்பது உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார். மேலும் அமெரிக்காவின் முதல் குடிமகள் போல் தான் இருக்க வேண்டும் என்றும் கிளாடியா கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ரோஸ், முன்பெல்லம் ட்ரம்ப் மகள் இவான்கா போல் இருக்க விருப்பம் தெரிவித்து பெண்கள் என்னிடம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வருவார்கள். ஆனால் அந்த ட்ரென்ட் தற்போது மாறியுள்ளது, பெண்கள் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா போல் இருக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு