செய்தி விவரங்கள்

புனித பாப்பரசைரை சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று வத்திக்கானை சென்றடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், புனித பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வத்திகானில் அமைந்துள்ள பாப்பரசரின் வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் மீது புனித போப் ஆண்டகை கடுமையான விமர்சினங்களை முன்வைத்திருந்த நிலையில் இந்த விஜயத்தினை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்ட ட்ரம்ப், இஸ்லாமிய தலைவர்களுடனும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து ட்ரம்ப வத்திக்கானுக்கு விஜயத்தினை மேந்கொண்டுள்ளமை சர்வதுசத்தில் ஏதிர்ப்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தேர்தலின் போது ட்ரம்ப் முன்வைத்த மெக்சிகோ – அமெரிக்கா இடையிலான எலலைச் சுவர் திட்டம் தொடர்பில் பாப்பரசர் விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் நாடுகளை பிரிக்கும் வகையில் சுவர்களை கட்ட நினைக்கிறார் உறவுகளுக்கான பாலத்தை அல்ல, அத்துடன் இவ்வாறு நினைக்கும் நபர் ஒரு சிறந்த கிறிஸ்தவராக இருக்க முடியாது என பாப்பரசர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு