செய்தி விவரங்கள்

கியூபா உடனான உறவை இரத்துச் செய்தார் ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா,  கியூபாவுடன் செய்த உடன்பாட்டை ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப் ரத்துசெய்துள்ளார். 

2014-ஆம் ஆண்டு செய்யப்பட்ட உடன்பாட்டில். ஐம்பது ஆண்டுக்குப் பிறகு, கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு வழக்க நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

எனினும் அந்த உடன்பாடு ஒரு தரப்புக்கு மட்டுமே பயன் அளிப்பதாகச் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

மயாமியின் லிட்டில் ஹவானாவில்  கியூபா மற்றும்  அமெரிக்காவைச் சேர்ந்தோர் முன்னிலையில்  டிரம்ப் உரையாற்றினார்.

மாற்றியமைக்கப்பட்ட தமது திட்டம் கியூபா மக்களுக்கு ஆதரவளிக்கும் என்று டிரம்ப் உறுதியளித்தார்  

திட்டத்தின் கீழ் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுக்குப் பாதிப்பில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கியூபாவுக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் கீழ் செயல்படும் பயணத் துறை நிறுவனத்துடனான உறவு துண்டிக்கப்படும் என்பதுடன், ஏற்கனவே நடப்பில் இருக்கும் வர்த்தகத் தடை தொடர்ந்து நீடிக்கும் என்று  ட்ரம்ப் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு