செய்தி விவரங்கள்

ஜேம்ஸ் கோமே, ராபர்ட் முல்லர் உறவை விமர்சித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எப் பி ஐ இன் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமே மற்றும் ராபர்ட் முல்லர் ஆகியோருக்கு இடையே உள்ள நெருக்கமான உறவைக் குறித்து விமர்சித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியினால் கோமே பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கான செவ்வியில் அவர்கள் இருவரும் நெருக்கமான சிநேகிதர்களாக இருப்பது பாதிப்பான விடயம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் முல்லர் ஒரு கெளரவமான மனிதர் என்பதால் அவர் ஒரு கெளரவமான தீர்வைக் கொண்டு வருவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

2016 இல் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இடம்பெற்றது தொடர்பிலான விசாரணைகளைத் தான் தடுக்கவில்லை என்றும், அதேநேரம் கோமேயுடனான  உரையாடல்கள் எதனையும் தான் பதிவு செய்யவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு